வங்கியில் வேலை இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி


வங்கியில் வேலை இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 March 2018 10:36 PM GMT (Updated: 4 March 2018 10:36 PM GMT)

வங்கியில் வேலை இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

வங்கியில் வேலை இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

வங்கி வேலை

பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்த பெண் பிரதன்யா(வயது34). இவர் பிரபாதேவி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில் பூஜா என்ற பெண் பிரதன்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், மும்பையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காலிப்பணியிடம் இருப்பதாகவும் கூறினார்.

பின்னர் அந்த பெண் ரூ.100 சேவை கட்டணம் செலுத்தினால் கட்டாயம் வங்கி வேலை கிடைக்கும் என பிரதன்யாவிடம் ஆசை வார்த்தை கூறினார்.

ரூ.3 லட்சம் அபேஸ்

இதையடுத்து பிரதன்யா அந்த பெண் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.100-யை அனுப்ப முயன்றார். ஆனால் அவரால் அனுப்ப முடியவில்லை. அப்போது அந்த பெண் பிரதன்யாவிடம், வங்கிக்கணக்கு விவரங்களை கூறினால், அவரே பிரதன்யாவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.100-யை எடுத்து கொள்வதாக கூறினார். இதை நம்பிய பிரதன்யா அந்த பெண்ணிடம் தனது வங்கிக்கணக்கு விவரம், ஓ.டி.பி. எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கூறினார்.

இந்தநிலையில் இணைப்பை துண்டித்த சில நிமிடங்களில் பிரதன்யாவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து தாதர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story