மஞ்சூர் அருகே பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.2 மானியம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.2 மானியம் வழங்க கோரி மஞ்சூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் அங்கத்தினர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.37 கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், தமிழக முதல்வர் ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பச்சைதேயிலை ஒரு கிலோவுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தபடி மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சிறு குறு விவசாயிகள் சங்கம் சார்பில் மஞ்சூர் அருகில் உள்ள மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள பாலகொலா ஜங்சனில் தொடர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு மாவட்ட சிறு குறு விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். பாலகொலா ராமன், அதிகரட்டி ஆல்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட விவசாயிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இது சிறு குறு விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ஜே.பி.சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிய உத்தரவிட்ட மாவட்ட கலெக்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கேரளா மாநிலம் இடுக்கி பகுதி தேயிலை விவசாயிகளுக்கு, தேயிலை கவாத்து செய்ய தேயிலை வாரியம் 75 சதவீத மானியம் வழங்கி வரு கிறது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை செடிகளை கவாத்து செய்ய 25 சதவீத மானியம் வழங்குவது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு நீலகிரி விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு இடுக்கி மாவட்டத்தில் வழங்குவது போன்று 75 சதவீத மானியம் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story