அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 201 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட வருவாய் அதகிாரி உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பெரிய வெண்மணியை சேர்ந்த வரத ராஜன் அளித்த மனுவில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்ய வரும் கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு சரியான தகவல் கூறாமல் அலைக் கழிக்கின்றனர். அந்த மருத்துவ மனையில் இருக்கை வசதிகள் போதியளவில் இல்லாததால் வளாகத்தில் ஆங்காங்கே மக்கள் அமர வேண்டியிருக் கிறது. எனவே இருக்கை வசதி, குடிநீர்வசதி என அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறியிருந் தார். மனுவை பெற்ற வருவாய் அதிகாரி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மருத்துவ உதவிக்கு 24 மணிநேரமும் 104 என்கிற எண்ணுக்கு அழைப்பது குறித்து துண்டுபிரசுரம் மக்களுக்கு வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. 

Next Story