வங்கியில் பணம் கட்டாமல் ஏமாற்றியவர் மீது நடவடிக்கை கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
வங்கியில் பணம் கட்டாமல் ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், அரசு மணல் குவாரி விரைவில் திறக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வீடு கட்டும்போது வீட்டின் வரைபடத்திற்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்க வேண்டும். மணல் எடுக்க பணம் கட்டும்போது, வாகன எண் கேட்பதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
போலி சான்றிதழ்
திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சஜித்உசேன் (38) என்பவர் கொடுத்த மனுவில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த ரெயில் விபத்தில் எனது வலது கால் துண்டாகி ஊனமானது. இதனால் மனைவி குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். தற்போது 3 சக்கர வாகனத்தில் கடலை, பொரி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறேன். இதில் போதுமான வருமானம் இல்லை. எனவே பெட்டிக்கடை வைக்க உதவித்தொகை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
மணப்பாறை அருகே தாளம்பாடி ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பலர் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த எங்களுக்கு வங்கியில் கடன் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையை சில மாதங்கள் வங்கியில் செலுத்தி வந்தோம். இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் மகளிர் சுய உதவி குழுக்கள் அனைவரிடமும் கடன் தொகையை வசூல் செய்து வங்கியில் கட்டுகிறேன் என்று கூறியதை நம்பி நாங்கள் மாதாமாதம் வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை அவரிடம் கொடுத்தோம். ஆனால் அவர் வங்கியில் பணம் கட்டாமல் ஏமாற்றி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வங்கியில் இருந்து கடன் தொகையை கட்டக்கோரி நோட்டீசு அனுப்பி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். இதேபோல், திருச்சியில் உள்ள ஒரு நர்சிங் பயிற்சி பள்ளியில் போலி சான்றிதழ் வழங்குவதாக கூறி, அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர்.
உதவித்தொகை
மேலும் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 500 மதிப்பில் நவீன மடக்கு ஊன்றுகோல்கள் வழங்கினார். அதே போன்று 66 பேருக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கினார்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள். இதனால் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் குறைந்த அளவிலான பொதுமக்களே கலந்து கொண்டனர். சென்னையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறுவதால், அதில் திருச்சி கலெக்டரும் கலந்து கொள்வார் என்பதை அறிந்ததால், பொதுமக்கள் மனு அளிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story