திருவண்ணாமலையில் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் திருவண்ணாமலை கிளை சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சின்னதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் விசுவநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், விவசாய இயந்திர உதிரிபாகங்கள், விதை, பூச்சி மருந்து, உரம் ஆகியவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரி ரத்து செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பூந்தோட்ட மின் இணைப்பை இலவச மின் இணைப்பாக மாற்றித்தர பரிந்துரை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் புறம்போக்கு நிலத்தில் நீர்வரத்து ஆக்கிரமிரப்புகளை அகற்றி ஏரிகால்வாய்களை செப்பணிட பரிந்துரை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் ராமசாமி, துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அமைப்பாளர் மாரி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story