ஊழல் ஒழிப்பு பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை குமாரசாமி
ஊழல் ஒழிப்பு பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக காங்கிரஸ் அரசில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. நேர்மையானவர்களை இந்த அரசு பாதுகாப்பது இல்லை. பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுபற்றி சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா தலைமையில் சட்டசபை கூட்டு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை வழங்கி, அந்த திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக கூறியது.
ஆனால் இந்த அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டது. ஊழல் ஒழிப்பு பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை. பா.ஜனதா உள்பட பிற கட்சிகளின் தலைவர்கள் மீது சித்தராமையா எதன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசுகிறார் என்றே தெரியவில்லை.
எங்கள் கட்சியை குறைத்து மதிப்பிட்டு சித்தராமையா பேசுகிறார். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். வருகிற தேர்தலில் மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபாகர்ரெட்டி, குமாரசாமி முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். அவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று குமாரசாமி அறிவித்தார்.

Related Tags :
Next Story