சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும், கவர்னரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கவர்னர் கிரண்பெடியிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.
புதுச்சேரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க புதுவை சட்ட சபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கவர்னர் கிரண்பெடியை நேற்று கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்கள்.
அப்போது அவர்கள் 4 பேரும் கையெழுத்திட்டு கவர்னர் கிரண்பெடியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம்
சுப்ரீம் கோர்ட்டில் அண்மையில் வெளியான தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தீர்ப்பு வெளியான 6 வார காலத்திற்குள் காவிரி நீரை திறந்து கண்காணிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு துரிதமாக செயல் படாமல் அரசியல் காரணமாக வாரியம் அமைப்பதில் காலதாமதப்படுத்துகிறது.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க தமிழக முதல்-அமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து அதனடிப்படையில் தமிழக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய நீரை தொடர்ந்து திறந்து விடாததால் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியாக விளங்கும் காரைக்காலுக்கு காவிரி நீர் வராமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சட்டமன்ற கூட்டம்
புதுச்சேரி விவசாயிகளின் தலையாய கடமையாக இப்பிரச்சினை இருப்பதால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்த வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக நமது முதல்-அமைச்சர் நாராயணசாமி தமிழகத்தைப்போல் விவசாயிகளுக்கு பயன்தரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முதல்- அமைச்சர் நாராயணசாமி செயல்படுவதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் இதுவரை முதல்- அமைச்சர் எடுக்கவில்லை.
எனவே அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களாகிய நாங்கள் காரைக்கால் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைப்பற்றி பேசுவதற்கு புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறோம். கவர்னர் தனக்குள்ள அதிகாரத்தின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி மத்திய அரசை தீர்மானத்தின் மூலம் வற்புறுத்த கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவினை பெற்றுக்கொண்ட கவர்னர், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் தெரிவித்தார்.

Related Tags :
Next Story