ஒகி புயலில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் 3 மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்
ஒகி புயலில் படகு கவிழ்ந்ததில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் 3 மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தின் கடலோர பகுதிகளை கடந்த நவம்பர் மாதம் 30–ந்தேதி ‘ஒகி’ புயல் தாக்கியது. இதில் பலத்த பொருட்சேதம், உயிர்சேதமும் ஏற்பட்டது. 100–க்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். அவர்களின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. இதைதொடர்ந்து மாயமான மீனவர்களை விமானம், ஹெலிகாப்டர், கப்பல்கள் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நிவாரண பணிகளும் மாநில அரசு மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த சிலுவையார் (வயது 52) என்ற மீனவரும் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது ஒகி புயலில் அவரது படகு சிக்கி கவிழ்ந்தது. அவருடன் படகில் இருந்த 3 மீனவர்கள் கடலில் நீந்தி உயிர் தப்பினார்கள். ஆனால் சிலுவையார் மட்டும் கடலில் மாயமாகி விட்டார்.
மீனவர் மாயமான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த மீனவரின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். ஒரே மகனான ஆண்டனி இந்த தகவலை கேட்டு மிகவும் கவலை அடைந்தார். தனது தந்தை என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் அவர் பலரது உதவியுடன் தனது தந்தையை தேடி வந்தார். மீனவர் சிலுவையார் உள்பட மாயமான மீனவர்களின் புகைப்படத்துடன் அந்த பகுதியில் உள்ள தேவாலயம் முன்பு பேனரும் வைக்கப்பட்டது. மேலும் அவரை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வந்தது.
ஒகி புயல் தாக்கி 3 மாதம் ஆன நிலையில் சிலுவையார் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் நினைத்து வேதனை அடைந்தனர். ஆனால் அவரது மகன் ஆண்டனி மட்டும் தந்தை எப்படியும் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சிலுவையார் தனது வீட்டுக்கு திரும்பினார். அவரை பார்த்து மகன் இன்ப அதிர்ச்சி அடைந்தார். தந்தையை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார். ஒகி புயலில் சிக்கி படகு கவிழ்ந்ததும் சிலுவையார் நீந்தி காசர்கோடு பகுதியில் கரை ஏறினார். வழக்கமாக அவர் மீன் பிடித்து விட்டு வரும்போது தனது ஒரே மகனுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார். அதனால் அந்த பகுதியில் தங்கியிருந்து மீன் பிடித்தொழில் செய்து பணம் சம்பாதித்து கொண்டு வீடு திரும்பியதாக தெரிவித்தார்.
வழக்கமாக தான் மீன் பிடிக்க சென்றால் நீண்ட நாட்கள் கழித்து தான் வீடு திரும்புவது வழக்கம் என்பதால் தன்னை தேடுவார்கள் என்று நினைக்கவில்லை என்று சிலுவையார் தெரிவித்தார்.

Related Tags :
Next Story