ரெயில் பாதை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில் பாதை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 3:00 AM IST (Updated: 7 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி ரெயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யூ.தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடி,

திருச்சி-ராமேசுவரம் ரெயில் பாதை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்வதால் ரெயில்வே கேங்மேன் தொழிலாளர்கள் வேலை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் எனவே மத்திய அரசு இந்த செயலை கைவிடக்கோரியும், கேங்மேன் வேலை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க கோரியும் காரைக்குடி ரெயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யூ.தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் தரணி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செங்கதிர்செல்வம் முன்னிலை வகித்தார். சங்க உதவி பொதுச்செயலாளர்கள் திருமலைஅய்யப்பன், சாம்பசிவம், கோட்டச் செயலாளர் சங்கரநாதன், உதவிச் செயலாளர் ஜோசப்அமல்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற் சங்க நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியன் உள்பட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 

Next Story