பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 4:15 AM IST (Updated: 7 March 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று புதுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். நடைமேடையில் மாற்றுதிறனாளிகள் சென்றுவர லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக பயண சீட்டு பெறும் இடம் ஒதுக்க வேண்டும். சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்க வேண்டும், வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் வேண்டும், பேட்டரி கார் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனத்தை கூட்ஸ் ரெயிலில் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை புதுக்கோட்டை ரெயில்நிலைய மேலாளரிடம் கொடுத்தனர். 

Next Story