கோவிலூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயம்
ஆலங்குடி அருகே கோவிலூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 738 காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து, களத்தில் இறங்க அனுமதித்தினர். மேலும் 230 மாடுபிடி வீரர்களை மருத்துவமனை குழுவினர் சோதனை செய்து காளைகளை அடக்க அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் நாட்டு மிராசுகள் முன்பு வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒன்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து வந்தன. அந்த காளைகளை மாடு வீரர்கள் அடக்கினர்.
சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் துள்ளி குதித்து ஓடின. இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடிவீரர்கள் 8 பேரும், காளையின் உரிமையாளர்கள் 5 பேரும், பார்வையாளர்கள் 10 பேரும் என மொத்தம் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு வாடிவாசலில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், மிக்சி, வெண்கல அண்டா, சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை போலீஸ் அதிகாரிகள் இளங்கோவன், அப்துல்முத்தலிப், தாசில்தார் ரெத்தினாவதி மற்றும் ஆலங்குடி, கோவிலூர் சுற்று வட்டார கிராமமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் போலீசார் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story