காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைப்பது சந்தேகம், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைப்பது சந்தேகம் தான் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. திண்டுக்கல்லில் கூறினார்.
திண்டுக்கல்,
டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., தேனியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு திண்டுக்கல் வழியாக சென்றார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அஞ்சலி ரவுண்டானா பகுதியில் அவருக்கு, ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அனைத்து கட்சியினரை, பிரதமர் சந்திக்காமல் தவிர்ப்பதற்கு கர்நாடக தேர்தல் காரணமாக இருக்கலாம். 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்களா? என்பது சந்தேகம் தான். இந்த சந்தேகம் தமிழக மக்களுக்கும் இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிந்த பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன். எச்.ராஜா கூறிய கருத்து மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தந்தை பெரியாரை பற்றி அவ்வாறு பேசுவது நல்லதல்ல. இதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜனதா எப்படி பொறுத்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.
தமிழக அரசு எந்த பிரச்சினையிலும் சரியாக செயல்படவில்லை. அரசு இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு வரும். அதன்பின்னர் மாற்றம் நிகழுமா? என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.
இன்னும் நிறைய எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் வெளிப்படையாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்கள், தற்போது எம்.ஜி.ஆர். பற்றி பேசுகிறார்கள். நல்ல தலைவர் யார்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story