போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது


போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 March 2018 4:30 AM IST (Updated: 7 March 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

பாரூர் அருகே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தசரதன். இவரது தலைமையில் நேற்று போலீசார் அரசம்பட்டி புட்டன்கடை என்னுமிடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உரிய ஆவணங்கள் இல்லாமலும், விதிமுறைகளை மீறி அதிவேகமாக வந்த வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.

அந்த நேரம் போச்சம்பள்ளியை அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் பிரபு (வயது 30) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினார்கள். அந்த நேரம் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக வழக்குப்பதிவு செய்த போலீசார் அபராதம் கட்ட வேண்டும் என பிரபுவிடம் கூறினார்கள்.

அப்போது பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தசரதன் மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் பிரபு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தசரதனை தாக்கினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் பிரபுவை பிடித்து பாரூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் காயம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தசரதன் சிகிச்சைக்காக, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
1 More update

Next Story