சேலத்தில் அல்லிக்குட்டை ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
மீன் பிடிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சேலம்,
சேலத்தில் மீன் பிடிக்க சென்றபோது அல்லிக்குட்டை ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சேலம் வீராணம் அருகே உள்ள அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கணேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சம்பூரணம். இவர்களுடைய 2-வது மகன் தேவா(வயது9). அதே பகுதியை சேர்ந்த சிவநாதன் மகன் சச்சின்(12). தேவா, சச்சின் ஆகிய இருவரும் அதிகாரிப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள அரசு பள்ளியில் முறையே 4-ம் வகுப்பும், 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால் மற்ற மாணவர்களுக்கு காலையில் வகுப்புகள் கிடையாது. இதனால் நேற்று காலை நண்பர்களான தேவா, சச்சின் உள்பட 5 பேர் அம்பேத்கர் காலனியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லிக்குட்டை ஏரிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. பிடித்த மீன்களை அவர்கள் பாட்டிலில் அடைத்து வைத்துள்ளனர். அப்போது தேவா, சச்சின் ஆகியோர் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்து சக நண்பர்கள் கூச்சலிட்டனர். அவர்களுடைய சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் தேவா, சச்சின் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவர்களின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தேவா, சச்சின் ஆகியோரது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story