இறைச்சிக்காக பசு மாடுகளை கடத்திய 6 பேர் கைது


இறைச்சிக்காக பசு மாடுகளை கடத்திய 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2018 3:29 AM IST (Updated: 7 March 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக பசுமாடுகளை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பிஓடிய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

தானே,

தானே மாவட்டம் கல்யாண்–மும்ரா சாலை வழியாக பசுமாடுகள் கடத்தி செல்லப்படுவதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்குவேன் ஒன்றை போலீசார் வழிமறித்தனர்.

போலீசாரை பார்த்ததும் சரக்குவேனில் இருந்தவர்கள் கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 6 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். சரக்குவேனை திறந்து பார்த்த போது, உள்ளே பசுமாடுகள் இருந்தன. விசாரணையில், அவை இறைச்சி கூடத்திற்கு கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மும்ராவை சேர்ந்த ஆசிப் யாசின் குரோஷி(24), மோனிஷ்(20), இர்பான் குலாம்(35), பைசல் ஆயுப்(22), யாசின் குரோஷி(32), சாபிக் ஹனிப்(32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதற்கு முன் அவர்கள் இறைச்சிக்காக 30 பசுமாடுகளை கடத்தி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story