மும்பையில் பெஸ்ட் மின் கட்டணம் குறைகிறது
மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் மின்சார வினியோகம் மற்றும் பஸ் சேவையை வழங்கி வருகிறது.
மும்பை,
கொலபா, கப்பரடே முதல் சயான், மாகிம் வரையில் உள்ள பகுதிகளுக்கு பெஸ்ட் சார்பில் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெஸ்ட் குழும மின் வினியோகத்தை 10 லட்சத்து 50 ஆயிரம் மின் நுகர்வோர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், பெஸ்ட் குழுமம் குடியிருப்புகளுக்கு 3 முதல் 10 சதவீதம் வரை மின்கட்டணத்தை குறைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கு மராட்டிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.
இதன்படி முதல் 100 யூனிட்டிற்கு 10 சதவீதமும், 101 முதல் 300 யூனிட் வரை 5 சதவீதமும், 301 முதல் 500 யூனிட் வரை 4 சதவீதமும், 500 யூனிட்டுக்கு மேல் 3 சதவீதமும் மின்கட்டணம் குறைக்கப்படுகிறது.
தற்போது முதல் 100 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு 3 ரூபாய் 24 பைசா வீதமும், 101 முதல் 300 யூனிட் வரை 5 ரூபாய் 44 பைசா வீதமும், 301 முதல் 500 யூனிட் வரை 8 ரூபாய் 24 பைசா வீதமும், 500 யூனிட்டுக்கு மேல் 10 ரூபாய் 24 பைசா வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
புதிய கட்டணத்தின்படி முதல் 100 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு 2 ரூபாய் 90 பைசாவும், 101 முதல் 300 யூனிட் வரை 5 ரூபாய் 15 பைசாவும், 301 முதல் 500 யூனிட் வரை 7 ரூபாய் 95 பைசாவும், 500 யூனிட்டுக்கு மேல் 9 ரூபாய் 95 பைசாவும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைக்கப்பட்ட மின்கட்டணம் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் அமல்படுத்தப்படும் என பெஸ்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story