வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,

புகார் மனு
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் குமார், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சமூகநீதி மற்றும் மனிதஉரிமை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியனிடம் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
பெரியார்
பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா, தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என்று முகநூலில் பதிவிட்டு இருக்கிறார். தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் உரிமைக்காக போராடிய தலைவர். அந்த தலைவரின் போராட்டத்தால், பறிக்கப்பட்ட உரிமைகளில் இருந்து மீண்டெழுந்த மக்கள் சமூக அந்தஸ்தை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அந்த கோடிக்கணக்கான மக்கள் தந்தை பெரியாரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கடனோடு இருக்கிறார்கள்.
கைது
அப்படிப்பட்ட தலைவரின் சிலையை அகற்றுவோம் என்பது தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் செயல் ஆகும். இவர் தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். எனவே எச்.ராஜாவை இந்திய தண்டனை சட்டம் 153ஏ பிரிவின் கீழ் கைது செய்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story