தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
x
தினத்தந்தி 8 March 2018 2:00 AM IST (Updated: 7 March 2018 7:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாலுகாதோறும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாமை நடத்தி வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி–1 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரையிலும், திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கஸ்பா கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் பகுதி–2 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகா இளையரசனேந்தலிலும், விளாத்திகுளம் தாலுகா புளியங்குளத்திலும், எட்டயபுரம் தாலுகா போடுபட்டியிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா மேலமருதூர் கிராமத்திலும், கயத்தார் தாலுகா கொத்தாளியிலும் நடக்கிறது.

கோரிக்கை மனுக்கள்


இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story