சென்னையில் பூணூல் அறுப்பு போராட்டம்: 4 பேர் போலீசில் சரண்
சென்னையில் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்திய 4 பேர் போலீசில் சரணடைந்தனர்
சென்னை,
பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் (பேஸ்-புக்) பக்கத்தில் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்ற தகவலை பதிவு செய்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம், அவர் அணிந்திருந்த பூணூலை மோட்டார் சைக்கிளில் வந்த சில மர்மநபர்கள் அறுத்து சென்றுவிட்டனர்.
அந்த நபர்கள் தந்தை பெரியார் வாழ்க என்று கோஷம் போட்டபடி சென்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் ஐஸ்அவுஸ் போலீசார் பூணூலை அறுத்த நபர்களை பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகலில் திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த 4 பேர் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள்தான் பூணூல் அறுப்பு போராட்டத்தை நடத்தியது தெரிய வந்தது.
இந்த பூணூல் அறுப்பு சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் ராயப்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story