எச்.ராஜாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:00 AM IST (Updated: 8 March 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராஜபாளையம்,

திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப் பட்டதற்கும், பெரியார் சிலையை அகற்றுவோம் என கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக் கோரியும் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே திராவிடர் கழகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.யான தங்கப்பாண்டியன் கலந்து கொண்டார்.

மேலும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆதி தமிழர் இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக முன்னாள் எம்.பி.லிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வீராசாமி, துணை செயலாளர் கணேசமூர்த்தி, ஜெயராம், நகரச் செயலாளர் ராஜா, பட்்டாணி, வரதராசன், வக்கீல் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

திரிபுராவில் லெனின் சிலையை இடித்து தள்ளியதைக்கண்டித்தும் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று டுவிட்டர் பதிவு வெளியிட்டு, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்குடன் மக்களை பிளவுபடுத்தி வரும் எச்.ராஜா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story