பல்லடத்தில் நள்ளிரவில் பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்குள் புகுந்து கொள்ளையடித்த ஆசாமிகள், போலீசார் விசாரணை
பல்லடத்தில் நள்ளிரவில் பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து ரூ.51 ஆயிரத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.
பல்லடம்,
கோவை மாவட்டம் செஞ்சேரிமலையை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 41). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள பொள்ளாச்சி சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த பங்கில் நேற்று முன்தினம் இரவு செஞ்சேரிமலை அருகே உள்ள வடவேலம்பட்டியை சேர்ந்த மந்திராசலம்(25), அங்கமுத்து(24), சந்திரன்(21), அருண்(21) ஆகியோர் பணியில் இருந்தனர். நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு ஒரு வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஊழியர்கள் 4 பேரும், அங்குள்ள அலுவலக அறைக்கு சென்று படுத்து தூங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நள்ளிரவு 1½ மணி அளவில் ஒரு மோட்டார்சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் பெட்ரோல் பங்குக்கு வந்தனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பும் இடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்கள். அங்கு ஊழியர்கள் யாரும் இல்லாததால், அலுவலக அறையை நோக்கி 2 பேரும் சென்றனர்.
அங்கு ஊழியர்கள் தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த மர்ம ஆசாமிகளில் ஒருவன் அலுவலக அறைக்குள் புகுந்து, மேஜையில் இருந்த பணப்பையை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அந்த பையில் ரூ.51 ஆயிரம் இருந்தது. அதற்குள் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் கண்விழித்த போது, மர்ம ஆசாமி அலுவலக அறைக்குள் இருந்து ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பதறி அடித்து எழுந்த ஊழியர்கள், வெளியே ஓடிவந்த போது, அங்கிருந்து 2 மர்ம ஆசாமிகளும் தப்பி ஓடினார்கள். ஊழியர்கள் துரத்திச்சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளை மட்டும் அங்கேயே விட்டுச்சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அத்துடன், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தியும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகள் சிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்கள். மேலும் மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, அது மர்ம ஆசாமிகளுக்கு சொந்தமானதா? அல்லது வேறு யாரிடமாவது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று காலை பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை விரைந்து பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. பெட்ரோல் பங்குக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story