மூலனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மூலனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 9:30 PM GMT (Updated: 7 March 2018 8:00 PM GMT)

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றப்பட்டதை கண்டித்தும் மூலனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், திரிபுராவில் லெனின் சிலையை அகற்றப்பட்டதை கண்டித்தும் மூலனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டார செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மரியதாஸ், விஜயன், ராஜேந்திரன், சண்முகம், சசிகுமார், ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். தாலுகா செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story