காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 March 2018 3:45 AM IST (Updated: 8 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் உள்ள எச்.ராஜாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காரைக்குடி,

தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. இதற்கிடையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-வது வீதியில் (வடக்கு) உள்ள எச்.ராஜாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்.ராஜாவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக 4 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு போலீஸ் ரோந்து வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. எச்.ராஜாவின் காரைக்குடி வீட்டில் அவருடைய மனைவி ரவிஜா, மகள் சிந்துஜா, தம்பி பாஸ்கரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story