ஏற்காடு தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய வனப்பகுதியில் திடீர் தீ


ஏற்காடு தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய வனப்பகுதியில் திடீர் தீ
x
தினத்தந்தி 8 March 2018 4:30 AM IST (Updated: 8 March 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஏற்காடு,

ஏற்காட்டில் இருந்து நாகலூர் செல்லும் சாலையில் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் நேற்று காலையில் இலை சருகுகள் மற்றும் மரங்கள், செடி, கொடிகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீ பரவி இருந்ததால் நேற்று மாலை வரை தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதில் பல அரிய வகை மரங்கள், செடிகள் தீயில் கருகி நாசமானது.

Next Story