ஆற்காடு அருகே புதைக்கப்பட்ட உடலை அப்புறப்படுத்திவிட்டு மணல் கடத்தல்
பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆற்காடு,
பாலாற்றில் புதைக்கப்பட்ட உடலை அப்புறப்படுத்திவிட்டு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச்சென்றதை கண்டித்து பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் பாலாற்றில் பொதுப்பணித்துறை சார்பில், மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கும் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த நிலையில் அரசு அனுமதியளித்த பாலாற்று குவாரி பகுதியை விட்டு விட்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் இருந்து மாட்டு வண்டிகளில் உரிமையாளர்கள் மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதை தடுக்க வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பள்ளங்களை வெட்டியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அண்ணா நகர் சுடுகாட்டு பகுதியில் இறந்த நபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்கள் புதைக்கப்பட்ட பிணத்தை அப்புறப்படுத்திவிட்டு அந்த பகுதியில் மணல் அள்ளியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் “அனுமதியில்லாத இடங்களில் மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டியும், மணல் ஏற்றி வரும் மாட்டு வண்டிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது” என்றும் கூறி அதனை கண்டித்து மாட்டு வண்டிகள் மற்றும் பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சக்கரமல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story