மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது + "||" + Near Kancheepuram Sand kidnapping 2 people arrested

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாறு பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாறு பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திற்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அந்த பகுதிக்கு விரைந்தார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி ஓரிக்கை பகுதியை சேர்ந்த நேசு (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


அதேபோல் காஞ்சீபுரத்தை அடுத்த கடம்பர்கோவில் பகுதியில் மோட்டார் சைக்களில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரனுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு விரைந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி உத்திரமேரூர் கருனீகர் தெருவை சேர்ந்த ராஜவேலு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.