மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை + "||" + Private corporate employee suicide

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருவள்ளூர் அருகே சித்தி இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 6-ந்தேதியன்று பிரகாஷின் சித்தி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். தனது சித்தியின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பிரகாஷ் துக்கம் தாளாமல் அழுது புலம்பி வந்தார்.


தனது சித்தி இறந்ததால் தனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை எனவும் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறி அழுது புலம்பியுள்ளார்.

அன்றைய தினம் மாலை மது அருந்திய பிரகாஷ் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன்னுடைய உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி கீதா மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.