மாவட்ட செய்திகள்

குஜராத் மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நாமக்கல் வழியாக ரெயில் சேவை அ.தி.மு.க.வினர் வரவேற்பு + "||" + Railway service from Gujarat to Rameshwaram via Namakkal Welcome to AIADMK

குஜராத் மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நாமக்கல் வழியாக ரெயில் சேவை அ.தி.மு.க.வினர் வரவேற்பு

குஜராத் மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நாமக்கல் வழியாக ரெயில் சேவை அ.தி.மு.க.வினர் வரவேற்பு
குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நாமக்கல் வழியாக புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலுக்கு நேற்று அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நாமக்கல்,


நாமக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ரெயில்வேதுறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து நாமக்கல் வழியாக ராமேஸ்வரத்துக்கு புதிய வாராந்திர ரெயில் சேவையை ரெயில்வே துறை அறிவித்தது.


16733 என்ற எண் கொண்ட இந்த விரைவு ரெயில் ஓகாவிலிருந்து வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு புறப்படுகிறது. ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா, சூரத், தானே, கடப்பா, திருப்பதி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக வியாழக்கிழமை பகல் 12.23 மணிக்கு நாமக்கல் வந்தடைகிறது. பின்னர் நாமக்கல்லில் இருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக இரவு 7.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

கடந்த 2006–ம் ஆண்டு முதல் இந்த ரெயில் இயக்கப்படுவதாகவும், சேலத்தில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக இயக்கப்பட்ட இந்த ரெயில் இனிமேல், சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்பட உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உற்சாக வரவேற்பு


அதே நேரத்தில் மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் சனிக்கிழமை இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.09 மணிக்கு வந்து சேருகிறது. செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.50 மணிக்கு ஓகா ரெயில் நிலையத்தை அடைகிறது.

நேற்று நண்பகல் 1 மணி அளவில் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு இந்த ரெயில் வந்தடைந்தது. இதற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.