மாவட்ட செய்திகள்

கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் மீட்பு உதவி கலெக்டர் நடவடிக்கை + "||" + 8 people rescue workers, including 3 women who were bonded together

கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் மீட்பு உதவி கலெக்டர் நடவடிக்கை

கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் மீட்பு உதவி கலெக்டர் நடவடிக்கை
செய்யாறு அருகே கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் மீட்கப்பட்டனர்.
செய்யாறு,

வெம்பாக்கம் தாலுகா சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது விறகுகரி சூளையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது.


இதனையடுத்து தொண்டு நிறுவன நிர்வாகிகள், செய்யாறு உதவி கலெக்டர் அரிதாசிடம் கொத்தடிமை களை மீட்க நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். அதன்பேரில் நேற்று மதியம் உதவி கலெக்டர் அரிதாஸ், வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, காகனம் கிராமத்தை சேர்ந்த குட்டி (வயது 45), இவரது மனைவி அமுதா (40), மகன் மணிகண்டன் (14), மகள்கள் வனிதா (22), தேன்மொழி (20), மருமகன்கள் பூங்காவனம் (25), பச்சையப் பன் (22) மற்றும் அமுதா தம்பி ரஜினி (35) ஆகியோர் கொத்தடிமை களாக வேலை செய்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து உதவி கலெக்டரும், தாசில்தாரும் அவர்களை மீட்டு செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத் திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் மீட்கப்பட்டவர் களுக்கு தொழிலாளர் நல வாரியம் மூலம் தலா ரூ.1,000 மற்றும் விடுதலை சான்று வழகங்கப்பட்டு அவர்களது சொந்த கிராமமான காகனம் கிராமத்திற்கு கொண்டு விடப்பட்டனர்.