அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும்


அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும்
x
தினத்தந்தி 9 March 2018 4:26 AM IST (Updated: 9 March 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்று உள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு தாமதம் செய்து வந்ததையடுத்து அக்கட்சியை சேர்ந்த 2 மத்திய மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியும் தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. தெலுங்கு தேசம் மத்திய அரசில் இருந்து வெளியேறியது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியதாவது:-

மத்திய அரசில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறியதை சிவசேனா முன்பே எதிர்பார்த்தது. மற்ற கூட்டணி கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும். கூட்டணி கட்சிகளிடையே நீண்ட நல்லுறவு நீடிக்கப்போவதில்லை. காழ்ப்புணர்ச்சி படிப்படியாக வெளிவரும்போது, கடைசியில் அனைத்து கூட்டணி கட்சிகளும் வெளியேறி விடும்.

பா.ஜனதா ஒருபோதும் கூட்டணி கட்சிகளை மதித்தது கிடையாது. தெலுங்கு தேசம் கட்சி தற்போது தான் அதை உணர்ந்துள்ளது. நாங்கள் நீண்ட நாட்களாக இதை கூறி வருகிறோம். அவர்கள் அனைவரையும் கலந்து தான் முடிவு எடுக்கவேண்டும். ஆனால் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story