காங்கிரஸ் பிரமுகர் கொலை: புதுவை கோர்ட்டில் மேலும் 2 பேர் சரண்
புதுவையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 55). காங்கிரஸ் பிரமுகர். புதுவை அரசு மருத்துவமனை அருகே சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வந்தார். மாறனை கடந்த 6-ந் தேதியன்று ஒரு கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவருடைய மனைவி திலகா உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
மாறன் கொலை வழக்கு தொடர்பாக புதுவை போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களில் செட்டிப்பாளையம் ராஜசேகரன் (27), நெல்லிதோப்பு மணிகண்டன் (30), வில்லியனூர் காண்டீபன் (39), நொச்சிக்குப்பம் ஞானசேகரன் (25) ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சுகுமாறன், விக்னேஷ், உதயா ஆகியோரை பெரியகடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாறன் கொலை வழக்கு தொடர்பாக குருசுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் மூக்கன் என்கிற பிரபாகரன் (20), மரவாடி பகுதியை சேர்ந்த குமரன் மகன் ராஜு என்கிற புஷ்பராஜ் (19) ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பு நேற்று சரண் அடைந்தனர். அதையடுத்து பிரபாகரன், புஷ்பராஜ் ஆகியோர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மூர்த்தி, அவருடைய மனைவி திலகா மற்றும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story