ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று (சனிக்கிழமை) பெருந்துறையில் பொதுமக்களை சந்திக்கிறார்.
ஈரோடு,
மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணங்கள் செய்து வருகிறார்.
அதன்படி இன்று (சனிக் கிழமை) அவர் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக பகல் 1.15 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசி செல்கிறார்.
அங்கு அவரது கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு அவினாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு தொண்டர்களுடன் சாப்பிடுகிறார். பின்னர் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடர்கிறார்.
அவருக்கு பெருந்துறையில் ஈரோடு மாவட்ட தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு கட்சி உறுப்பினர்களை கமல்ஹாசன் சந்திக்கிறார்.
அங்கிருந்து ஈரோடு மாமரத்துப்பாளையம் வரும் அவர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 6 மணிக்கு ஈரோடு -கரூர் ரோட்டில் உள்ள கார்னீஷ் பார்க் ஓட்டலில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாடுகிறார். அத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.
2-வது நாள் சுற்றுப்பயணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு மொடக்குறிச்சியில் கட்சி கொடி ஏற்றுகிறார். காலை 9.30 மணிக்கு ஈரோட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது.
அதைத்தொடர்ந்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் வீரப்பன்சத்திரம், சித்தோடு, கவுந்தப்பாடி, கோபி பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார். மதிய உணவுக்கு பின்னர் சத்தியமங்கலத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் அவர் டி.ஜி.புதூர், டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூர், பருவாச்சி, பவானி வழியாக பி.பி.அக்ரகாரத்தில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறார்.
இந்த தகவல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story