போதைப்பொருள் தயாரித்த வழக்கில் ஈரான் நாட்டினர் உள்பட 5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
ஈரான் நாட்டினர் உள்பட 5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
புதுக்கோட்டை,
போதைப்பொருள் தயாரித்த வழக்கில் ஈரான் நாட்டினர் உள்பட 5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தீர்ப்பு கூறினார்.
ஈரான் நாட்டை சேர்ந்த மசூத்மொசாலி (வயது 49), முகமது ஜப்ரானி (30) ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல்பட்டியை சேர்ந்த காளியம்மாள் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, மெத்தாபெட்டமின் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டனர். இந்த போதைப்பொருட்கள் தயாரிக்க சென்னை ராயபுரத்தை சேர்ந்த சவுக்கத்அலி (55), டெல்லி வடக்கு ஹாராடா பகுதியை சேர்ந்த நவ்சத்அத்தார் (38) ஆகியோர் மூல பொருட்களை வழங்கினர்.
இந்தநிலையில் மத்திய போதைப்பொருட்கள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 23.3.2013-ந் தேதி சிறுகூடல்பட்டியில் ஈரான் நாட்டை சேர்ந்த மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சுமார் 5.77 கிலோவில் மெத்தாபெட்டமின் போதைப்பொருளும், ஹெராயினும், போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் அப்போதைய மதிப்பு இந்திய சந்தை மதிப்பில் ரூ.1 கோடி இருக்கும் எனவும், சர்வதேச சந்தை மதிப்பில் ரூ.10 கோடி இருக்கும் எனவும் மத்திய போதைப்பொருட்கள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் போதைப்பொருட்கள் தயாரித்ததாக ஈரான் நாட்டை சேர்ந்த மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி ஆகியோரையும், சவுக்கத்அலி, நவ்சத் அத்தார் மற்றும் காளியம் மாளையும் கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது போதைப்பொருட்கள் தயாரித்ததாக மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி, காளியம்மாள், சவுக்கத்அலி, நவ்சத்அத்தார் ஆகிய 5 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், மேலும் மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி, காளியம்மாள், சவுக்கத்அலி ஆகிய 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்தும், நவ்சத்அத்தாருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story