காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்டது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்டது என்று தர்மபுரியில் தொல்.திருமாவளவன் கூறினார்.
தர்மபுரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி தலைமையில் டெல்லியில் நடந்த 4 மாநில தலைமை செயலாளர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசு புதிய விளக்கம் கொடுக்கிறது. ‘கிரியேட் ஸ்கீம்’ என்ற சொல்லாடலை பயன்படுத்தி இதுதொடர்பாக புதிய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் அந்த கருத்தே வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக புதிய செயல்திட்டத்தை உருவாக்குவதாகவும் அதற்கு 4 மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி மத்திய அரசு காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்டது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை விளக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
டெல்லியில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் என்ன கருத்து வலியுறுத்தப்பட்டது என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விளக்க வேண்டும். அடுத்தகட்டமாக தமிழக அரசு எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். திருச்சி துவாக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து கர்ப்பிணி இறந்தது தொடர்பாக அந்த இன்ஸ்பெக்டர் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களை தடுக்க காவல்துறை தனியாக புலனாய்வு பறக்கும் படையை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story