ரூ.10 கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


ரூ.10 கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10 கோடியில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் மற்றும் சிறு கனிம நிதி திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜையிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கரூர் அருகே ஆத்தூரில் இருந்து மூர்த்திபாளையம், நானப்பரப்பு வரை ஒரு வழிச்சாலையை ரூ.8 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்தில் இரு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி, நத்தமேடு பகுதியில் ரூ.20 லட்சத்து 10 ஆயிரத்தில் நத்தமேடு முதல் மூர்த்திபாளையம் ரெயில் நிலையம் வழியாக காந்தி நகர் வரை சாலை புதுப்பிக்கும் பணி, செல்லரபாளையம் பகுதியில் ரூ.16 லட்சத்து 21 ஆயிரத்தில் நொச்சிப்பாளையம் பிரிவு முதல் மாங்காசோளிபாளையம் வரை சாலை பலப்படுத்தும் பணி, நன்னியூர் அண்ணா நகர், துவாரப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் சமுதாயக்கூடங்கள் அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.10 கோடியே 9 லட்சத்து 2 ஆயிரத்தில் 10 பணிகளுக்கு பூமி பூஜையிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையுடன் பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியில் 181 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, கூட்டுறவு சங்க பிரதிநிதி கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story