பணியில் இருந்து ஓய்வுபெறும் நாளில் அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்


பணியில் இருந்து ஓய்வுபெறும் நாளில் அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

பணியில் இருந்து ஓய்வுபெறும் நாளன்று அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 3-ம் ஆண்டு பேரவை கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயராஜ் தலைமை தாங்கினார். மேலும் கவுரவ தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கர்சன், துணை பொதுச்செயலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மண்டல பொது செயலாளர் இளங்கோவன் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தில் 1.4.2003-ந் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் சேர்க்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெறும் நாள் அன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதிய நிதி ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மற்ற துறை ஓய்வூதியர்களுக்கு ஊதிய ஒப்பந்த உயர்வு ஓய்வூதியத்தில் வழங்கப்படுவது போல் போக்குவரத்து கழக ஓய்வூதியருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story