தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் மாரிஅய்யா தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பூத் கமிட்டி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது கட்சி நிர்வாகிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளர் நைனாமுகமது, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கட்சி அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story