திருக்கருக்காவூர்–திருக்கொள்ளம்புதூர் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்


திருக்கருக்காவூர்–திருக்கொள்ளம்புதூர் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

திருக்கருக்காவூர்–திருக்கொள்ளம்புதூர் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரித்துவாரமங்கலம்,

தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் ஆகிய 5 ஊர்களில் சிவன் கோவில்கள் உள்ளன. இந்த 5 சிவன் கோவில்களில் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு பஞ்சராண்ய தரிசனம் என்று பெயர். எனவே இந்த 5 சிவன் கோவில்களுக்கு பஞ்சராண்ய தலம் என்றும் பெயர் உண்டு.

இந்த பஞ்சராண்ய தலங்களை தரிசனம் செய்ய பக்தர்கள், பொதுமக்கள் திருக்கருக்காவூர்–திருக்கொள்ளம்புதூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் அரசு பஸ்கள், பள்ளி–கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் இந்த சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.


இதேபோல் அரித்துவாரமங்கலம்–பெருங்குடி இடையேயான சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் முதல்–அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். ஆனால் இதுவரை சேதமடைந்துள்ள சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள சாலையை விரிவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story