மயிலாடுதுறையில் கிராமிய தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில், அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் மயிலாடுதுறை கோட்டம், சீர்காழி கிளை ஆகியன சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் மயிலாடுதுறை கோட்டம், சீர்காழி கிளை ஆகியன சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமை தாங்கினார். பொருளாளர் கலையரசன் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தபால் ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய கமலேஷ் சந்திரா கமிட்டி அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கிராமிய தபால் ஊழியர்களை வணிக மேளா என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சீர்காழி கிளை தலைவர் ரவிச்சந்திரன், கிளை செயலாளர் செந்தில்குமார், கிளை பொருளாளர் (பொறுப்பு) பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story