மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; 2 பெயிண்டர்கள் பலி டிரைவர் உள்பட 15 பேர் காயம்
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 பெயிண்டர்கள் பலியானார்கள். இதில் வேன் டிரைவர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் சாமுவேல்(வயது 43), செல்வக்குமார்(35). பெயிண்டர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்டிங் வேலை செய்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலையை அடுத்த நள்ளிப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சாமுவேலும், செல்வக்குமாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் வேன் டிரைவரான அரியலூர் மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்த ராஜவேந்தன்(23) படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த ராஜவேந்தனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வேனில் பயணம் செய்த 14 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமுவேல், செல்வக்குமாரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், வேனில் சென்றவர்கள் அனைவரும் அரியலூரில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் அரியலூர் நோக்கி வந்த போது இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story