காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மனமில்லை திருச்சி சிவா எம்.பி. பேச்சு
கர்நாடகா மாநில தேர்தலுக்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மனமில்லை என, திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் ஒன்றிய தி.மு.க. சார்பில் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் சன்னதி தெருவில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. பேச்சாளர்கள் கதிர்வேல் மீனாட்சி, செந்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது;–
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மனமில்லை. காரணம் கர்நாடகா மாநிலத்தில் பொதுத்தேர்தலை எதிர்பார்க்கின்றனர். சிலர் புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ளனர். தி.மு.க.வின் சாதாரண தொண்டன் எந்த பிரச்சினையானாலும் பேசுவான். இப்போது புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச கூடியவர்களா?. இதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழக மக்கள் தி.மு.க. மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். சாதியை தகர்த்து பெண்ணுக்கு உரிமை பெற்று தந்தவர் பெரியார். பெரியாரின் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுத்தவர் அண்ணா. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் மேம்பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதன்முதலாக அமைக்கப்பட்டன. தொலைநோக்கு பார்வையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இன்றைக்கு விளை நிலங்கள் கட்டிடங்களாக மாறியுள்ளன. விவசாயிகள் என்ன செய்வார்கள்?, கருணாநிதி, ஸ்டாலின், போன்ற தலைவர்கள் மக்கள் பிரச்சினைகளை தெரிந்தவர்கள். மக்களோடு மக்களாக சேர்ந்து ஆட்சி நடத்தினார்கள். இன்று இந்த நிலை இல்லை. இப்போது தங்களுக்காகவே கட்சி, ஆட்சியை நடத்துகிறார்கள். தமிழக மக்கள் வருங்காலத்தில் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.பி. ஜெயத்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story