போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் வாகன கடன் பெற்று ரூ.1½ கோடி மோசடி செய்த 3 பேர் கைது
திருப்பூரில் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் வாகன கடன் பெற்று ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் அங்கேரிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 34). இவர் பி.என்.ரோடு பகுதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவரும், இவருடைய நண்பர்களான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை(37), இடுவம்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன்(28) ஆகியோரும் சேர்ந்து திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் 9 நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அந்த விண்ணப்பத்துடன் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள நான்கு சக்கர வாகன மொத்த விற்பனையாளரான சிஏஐ இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பெயரில் வாகனங்களுக்கான விலைப்பட்டியல், வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளனர். இந்த ஆவணங்களை பெற்று கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் 9 வாகனங்களுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 75 ஆயிரம் வங்கி சார்பில் கடனாக வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரகாஷ், தங்கதுரை, பார்த்தீபன் ஆகியோர் 9 நான்கு சக்கர வாகனங்களை வாங்கியதாக, வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் வங்கியில் கொடுத்துள்ளனர். இந்த ஆவணங்களை வங்கியில் அதிகாரிகள் சரிபார்த்தபோது அவை போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
அதன்காரணமாக வங்கியின் மேலாளர் செல்வக்குமார் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜனிடம் புகார் தெரிவித்தார். அவருடைய உத்தரவின் பேரில் துணை கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், சிஏஐ இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பெயரில் பிரகாஷ் தனது நண்பர்களான தங்கதுரை, பார்த்தீபன் ஆகியோர் பெயரில் போலியாக வங்கிக்கணக்கை தொடங்கியுள்ளார். பின்னர் அந்த வங்கிக்கணக்கில் கடனாக வழங்கப்பட்ட ரூ.1 கோடியே 59 லட்சத்து 75 ஆயிரத்தை எடுத்துள்ளனர். அதன்பிறகு வாகனம் எதுவும் வாங்காமல் 9 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கியது போல் அந்த வாகனங்களுக்கான போலியான ஆவணங்களை தயாரித்து வங்கியில் கொடுத்து ரூ.1½ கோடியை மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
மேலும் பிரகாஷ் ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கியில் 3 நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.42 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கியதும், ஆனால் வங்கியில் தாக்கல் செய்யப்பட்ட வாகன விலைப்பட்டியலில் குறிப்பிட்டு இருந்த வாகனத்தை வாங்காமல், அதை விட விலை குறைவான வாகனங்கள் வாங்கியதுடன் போலியான வாகன பதிவு சான்றிதழ்களை வங்கியில் கொடுத்து மோசடி செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் வாகன கடன் பெற்று மோசடி செய்ததாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷ், தங்கதுரை, பார்த்தீபன் ஆகிய 3 பேரை பிடித்தனர். பிரகாஷிடம் இருந்து 2 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
இதில் பிரகாஷ் மீது ஏற்கனவே, போலி ஆவணங்கள் மூலம் இடமோசடி செய்ததாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் இரண்டு வழக்குகளும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story