மாஞ்சோலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாஞ்சோலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட பூர்வகுடி மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பூர்வகுடி மீட்பு இயக்க கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. இயக்க தலைவரும், ஓய்வு பெற்ற ரெயில்வே மேலாளருமான செல்லத்துரை தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பு குழு வக்கீல் ராபர்ட் சந்திரகுமார், வக்கீல் வான்முகில் பிரிட்டோ, அரிராம், பினேகாஸ், வெஸ்லி பிரபாகரன், பாலகிருஷ்ணன், சுந்தரம், அரிராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இயக்க தலைவர் செல்லத்துரை, வக்கீல் ராபர்ட் சந்திரகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து உள்பட 5 தேயிலை தோட்டம் தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் வந்ததை தொடர்ந்து கடந்த 4 தலைமுறையாக மாஞ்சோலை பகுதியில் வசித்து வருகிற தேயிலை தோட்ட தொழிலாளர்களின் எதிர்காலமும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியினர், மக்கள் இயக்கத்தினரை சந்தித்து ஆதரவு திரட்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்க உள்ளோம். இந்த குழு மாஞ்சோலை பகுதியில் அந்தந்த தேயிலை தோட்டங்களில் தற்போது பணியாற்றி பிற பகுதிகளில் வசிக்கும் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களை அந்த பகுதியிலேயே தங்கி இருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பணி செய்ய உத்தரவாதம் தரவேண்டும். மாஞ்சோலை தோட்டத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாஞ்சோலை தோட்ட பகுதியை பூர்வீகமாக கொண்டு தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள் தோட்ட பகுதிக்கு வரும்போது அவர்களை வெளிநபர்களை போல் நடத்தாமல், வழக்கம்போல் அவர்கள் தங்களது வாகனங்களில் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story