குமரி மாவட்டத்தில், 2–ம் கட்டமாக 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம்
குமரி மாவட்டத்தில், 2–ம் கட்டமாக 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பிள்ளை வாத (போலியோ) தடுப்பு சிறப்பு சொட்டு மருந்து வினியோகிக்கும் 2–ம் கட்ட முகாமை விஜயகுமார் எம்.பி. முன்னிலையில், கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
1995–ம் ஆண்டு முதல் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் 2014–ம் ஆண்டு மார்ச் 27–ம் நாள் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ நோய் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. எனவே நோய் கண்காணிப்புப்பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டும் போலியோ சிறப்பு சொட்டு மருந்து முகாம் முதற்கட்டமாக ஜனவரி 28–ந் தேதி நடைபெற்றது. 2–ம் கட்டமாக இன்று (அதாவது நேற்று) நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இளம்பிள்ளைவாத தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாமில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 869 குழந்தைகள் பயன்பெற்றனர். 2–ம் கட்டமாக 1 லட்சத்து 54 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இம்முகாம்கள் மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் 1,236 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் பணியில் 5,024 பேர் (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி மற்றும் தன்னார்வலர்கள்) உள்ளனர். இதுதவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 233 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான சொட்டு மருந்து மாவட்ட துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மக்கள்கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 17 முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 8 நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகள் மூலம் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 160மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உறுதுணையோடு போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்புற நடைபெறுகிறது.
எனவே குமரி மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து, தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், குழந்தைகள் பிரிவு துணை தலைவர் சுரேஷ், தோல் நோய் மருத்துவர் பிரவின், டாக்டர் ரியாஸ், நகர்நல அலுவலர் கின்சால், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம மற்றும் பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்து துறை, நகராட்சி, உள்ளாட்சித்துறை அலுவலர்கள, தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story