கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றிபெற பாடுபட வேண்டும் விஜயகுமார் எம்.பி., வேண்டுகோள்
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று விஜயகுமார் எம்.பி., கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். துணைச் செயலாளர் வக்கீல் ஞானசேகர் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் விஜயகுமார் எம்.பி. பேசுகையில், “குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வினர் அனைவரையும் வெற்றி பெறச்செய்ய நாம் வியூகம் அமைத்து பாடுபட வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் அனைத்திலும் அ.தி.மு.க. வினர் தலைமைப் பொறுப்புக்கு வரும் வகையில் நாம் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும்“ என்றார். மேலும் கூட்டத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜ், நகர இலக்கிய அணி செயலாளர் சதானந்தன் மற்றும் ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை விஜயகுமார் எம்.பி. நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி அதிகாரிகளும் உடன் இருந்தனர். அவர்களிடம் விஜயகுமார் எம்.பி. புதிய குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கும் பணியை தொடங்குவது குறித்தும், விரைவில் அந்த பணியை முடிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து விஜயகுமார் எம்.பி. கூறுகையில், தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் 3 குடிநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் உள்ளன. இவை 2005-ம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டதாகும். தற்போதைய குடிநீர் தேவையை முன்னிட்டு இங்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி முதல் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு தொட்டிகளை அகற்றிவிட்டு, ஒரே தொட்டியாக பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு தொட்டி 4 கோடியே 10 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கி 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story