ரெயிலில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் மின்கம்பத்தில் மோதி பலி
ரெயிலில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் மின்கம்பத்தில் மோதி பலியானார்.
மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த ஆசானபூதூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 42). இவரது மகன் சக்திவேல் (18). இவர் பொன்னேரியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை விம்கோ நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மின்சார ரெயிலில் சென்றார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரெயிலில் தொங்கியவாறு பயணம் செய்தார். நந்தியம்பாக்கம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது சக்திவேல் மின்கம்பத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். பயணிகள் கூச்சலிடவே நத்தியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றது.
பயணிகள் கீழே இறங்கி பார்த்தபோது சக்திவேல் பலியானது தெரிந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.