உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டங்களை திருத்த வேண்டும் வினியோகஸ்தர் டீலர் சங்கம் வலியுறுத்தல்

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில், வினியோகஸ்தர்களை பாதிக்கும் சட்டங்களை திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட வினியோகஸ்தர் டீலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட வினியோகஸ்தர் டீலர் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று மறவன்மடத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ராம்நாத் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகர் வரவேற்று பேசினார். பொருளாளர் மகேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் வெங்கடேஷ், தென்மண்டல அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், வினியோகஸ்தர்களை பாதிக்கும் வகையில் ரிலையன்ஸ் மற்றும் மார்டன் டிரேடு ஆகியவற்றுக்கு சரக்குகளை சலுகை விலையில் அளிக்கும் இரட்டை விலைக் கொள்கையை, நிறுவனங்கள் உடனடியாக கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் சில்லறை வணிகர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும். வெளியூர்களில் இருந்து தகுந்த பில் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசில் ஒப்படைப்பது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் வினியோகஸ்தர்களை பாதிக்கும் சட்டங்களை திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட சங்கத்தை பலப்படுத்த தூத்துக்குடி வினியோகஸ்தர் சங்கம் முழு ஒத்துழைப்பு அளித்து அதற்கான செயல்பாட்டில் இறங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் பால்ராஜ், நெல்லை மாநகர நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்க தலைவர் சபரிகுமார், புகார்குழு தலைவர் கலீல்அகமது, பொருளாளர் முத்துக்குமார், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க பொதுச்செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளர் செந்தில்ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வினியோகஸ்தர் டீலர் சங்க புகார்குழு உறுப்பினர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story