4 வயது சிறுமியை கற்பழித்த கார் டிரைவர் கைது


4 வயது சிறுமியை கற்பழித்த கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 March 2018 4:02 AM IST (Updated: 12 March 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

சாந்தாகுருசில் 4 வயது சிறுமியை கற்பழித்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் மேற்கு பகுதியில் 4 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சம்பவத்தன்று இரவு சிறுமியை அவளது தாய் குளிக்க வைத்தார். அப்போது, சிறுமியின் உடலில் சிராய்பு காயங்கள் இருந்தன.

இது குறித்து சிறுமியின் தாய் அவளிடம் விசாரித்தார். அப்போது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வரும் கார் டிரைவர் சாம்பு(வயது52) என்பவர் கற்பழித்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டருகே விளையாடி கொண்டு இருந்தபோது, அங்கு வந்த சாம்பு சாக்லெட் வாங்கி தருவதாக ஏமாற்றி, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து அவர் சிறுமியை கற்பழித்து உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சாம்புவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாம்பு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 

Next Story