மராட்டிய அணைகளில் 50 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளது
மராட்டிய அணைகளில் 50 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிதெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் 3 ஆயிரத்து 246 சிறிய மற்றும் பெரிய அளவிலான அணைகள் உள்ளன.
இந்த அணைகளில் உள்ள தண்ணீர் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டநிலையில், நீர்நிலைகளில் ஆவியாதல் மூலம் தண்ணீர் இருப்பு பெருமளவு குறையும்.
எனவே கோடைக்கு பின்னர் வரும் மழைக்காலமே மராட்டியத்தில் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்தநிலையில், மராட்டியத்தில் உள்ள அணைகளில் 50 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது.
இது பற்றி நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் உள்ள அணைகளில் 508.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது 50.18 சதவீத தண்ணீர் இருப்பு ஆகும்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 44.56 சதவீத தண்ணீரே இருப்பு இருந்தது. கடந்த ஆண்டு மாநிலத்தில் 84 சதவீத மழை பொழிவு இருந்தது. செப்டம்பர் மாதத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது’ என்றார்.

Related Tags :
Next Story