ராகுல்காந்தி கருத்துக்கு திருமாவளவன் வரவேற்பு


ராகுல்காந்தி கருத்துக்கு திருமாவளவன் வரவேற்பு
x
தினத்தந்தி 12 March 2018 5:16 AM IST (Updated: 12 March 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்தார்.

சேலம்,

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல் அணி சார்பில் தொழில் பாதுகாப்பு என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், வக்கீல் சங்க தேர்தல் முறைகேடு இல்லாமல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருப்பது தமிழகத்திற்கு விரோதமான செயல். கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு வாரியம் அமைக்க காலதாமதம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக பேசிய ராகுல்காந்தியின் கருத்தை வரவேற்கிறேன். இதற்காக சோனியாகாந்தி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story